நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டியிட்டு குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றிருக்கும் நிலையில் சென்னையைச் சேர்ந்த பாஜகவின் உமா ஆனந்தன் வெற்றி பெற்றுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட பாஜக தனித்து போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் 5 மாநகராட்சி உறுப்பினர்களையும், 46 நகராட்சி உறுப்பினர்களையும், 185 பேரூராட்சி உறுப்பினர்களையும் பெற்றுள்ளனர். இதில் பெறப்பட்ட வெற்றியானது பெரும்பாலும் கன்னியாகுமரியில் பெறப்பட்டது .
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் தலைமையில் பெறப்பட்ட இந்த வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர் . இந்த நிலையில் அக்கட்சியின் உமா ஆனந்தன் சென்னையில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத் தகுந்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.
உமா ஆனந்தன் சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலம்,மேற்கு மாம்பலம் 134 வது வார்டில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையின் போது உமா ஆனந்தன் 8 ஓட்டுக்களை பெற்றிருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவிய நிலையில் 5539 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
உமா ஆனந்தனின் வெற்றியை குறிப்பிட்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை “20 ஆண்டுகள் கழித்து தனித்த நின்று சென்னையில் 1 உறுப்பினரை வென்றுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.








