தமிழ்நாடு மக்கள், பாஜகவை முழுமையாக ஏற்றுக்கொண்டார்கள் என்பதையே, உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் காட்டுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுக்கு பிறகு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்காளை சந்தித்தார். அப்போது பேசிய அவர், குடும்ப அரசியல், வாக்குக்கு காசு கொடுப்பது இவை தான் முதலமைச்சர் சொல்லும் திராட மாடல் வளர்ச்சியா என கேள்வி எழுப்பிய அவர், பாஜக குறித்த ராகுல் காந்தியின் நாடாளுமன்ற பேச்சுக்கு தமிழ்நாடு மக்கள் பதிலடி கொடுத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், பாஜக அற்புதமான வெற்றியை பெற்றுள்ளதாகவும், அனைத்து பகுதிகளிலும் பாஜக நுழைந்துள்ளதாகவும், எந்த நோக்கத்திற்காக தனித்து போட்டியிட்டோமோ அது நிறைவேறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, அதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த தேர்தல் முடிவில், தமிழகத்தில் பல பகுதிகளில் பாஜக 3-வது இடத்திற்கு வந்துள்ளது எனவும், இது, பாஜகவை மக்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டு விட்டார்கள் எனவும், பிரதமர் மோடியின் திட்டம் மக்களிடம் சென்றுள்ளது என்பதை வெளிக்காட்டுவதாக தெரிவித்த அவர், மக்கள் பணியாற்ற திமுகவுக்கு பாஜக துணை நிற்கும் என்று அவர் கூறினார்.
மேலும், கொங்கு பகுதியில், திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் அதை பின்னடைவாக தாங்கள் பார்க்கவில்லை எனவும் ஒரு தேர்தலில் வெற்றி பெற்றதால், கொங்கு பகுதி முழுமையாக திமுக வசம் சென்றுவிட்டது என்பதை ஏற்க முடியாது எனவும், அதிமுக பாஜக இணையும் போது, கொங்கு மண்டலம் எங்கள் கோட்டையாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், பாஜக வென்றிருப்பது மோடி ஜி மாடல் வளர்ச்சியால் அதை எங்களால் ஆதாரத்துடன் சொல்ல முடியும். ஆனால், திராவிட மாடல் வளர்ச்சி என்பது தனக்கு குழப்பமாக உள்ளது என கூறிய அவர், அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக பிரிந்தது, பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது எனவும் தமிழ்நாட்டில் பாஜகவின் வெற்றி பயணம் ஆரம்பித்து விட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அதேபோல, எல்லா கட்சிகளுக்கும் ஒரு திருப்புமுனை தேவை என கூறிய அவர், இந்த தேர்தல் பாஜகவுக்கு ஒரு திருப்புமுனை என கூறினார். மேலும், மதுரை, வேலூர், கடலூர் என பாஜக செல்லாத பல இடங்களிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள், 20 ஆண்டுகள் கழித்து தனித்த நின்று சென்னையில் ஒரு உறுப்பினரை வென்றுள்ளோம் என அவர் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.