5வது நாளாக அமளி – நாடாளுமன்ற கூட்டத்தொடர் 12 மணி வரை ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் ஐந்தாவது நாள் அமர்வு எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கியது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோர எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து நான்கு நாட்களாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற மழை கால கூட்டத்தொடரில் ஐந்தாவது நாள் அமர்வு கூடியது. அப்போது எதிர்க்கட்சிகளின் கடும் அமளி மற்றும் முழக்கங்கள் காரணமாக இரு அவைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.