மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அமைந்துள்ள அஜேங்க்யா டி.ஒய். பாட்டீல் பல்கலைக்கழகத்தின் 10 வது பட்டமளிப்பு விழா நாளை மறுநாள் (ஜன. 24) நடைபெறுகிறது. இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ரோகித் சர்மாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் தலைவர் டாக்டர் அஜேங்க்யா டி. ஒய். பாட்டீல் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், விளையாட்டுத் துறைக்கு ரோகித் சர்மா ஆற்றிய இணையற்ற பங்களிப்பையும் அவரது முன்மாதிரியான தலைமைத்துவத்தையும் கௌரவிக்கும் விதாமாக அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுவாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா தற்போது ஒரு நாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். ரசிகர்களால் “ஹிட்மேன்” என்று அழைக்கப்படும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2024 ஆம் ஆண்டு இருபது ஓவர் கிரிக்கெட் கோப்பையை வென்று சாதனை படைத்தது. தொடர்ந்து அவர் ஐபிஎல் – லில் மும்பை அணிக்காக 5 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதங்கள் அடித்துள்ள ரோகித் ஷர்மா ஒருநாள் போட்டிகளில் 250 ரன்களை கடந்த வீரர் என்று சாதனையையும் தன்னகத்தே வைத்துள்ளார்.







