யாழ்ப்பாணம் சென்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு தூதரக அதிகாரிகள் மற்றும் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ளார். அவருடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் சென்றுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் அவர்களுக்கு தூதரக அதிகாரிகள் மற்றும் தமிழர்கள் பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பின்னர் எல்.முருகன், இலங்கை மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை, சந்தித்து உரையாடினார். அப்போது, ‘அபிவிருத்தி ஒத்துழைப்பில் யாழ்ப்பாணத்திற்கு இந்தியா வழங்கி வரும் முக்கியத்துவம் குறித்து சுட்டிக்காட்டினார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்கு முதலிடம் என்ற கொள்கையின் கீழ் இந்தியா தொடர்ந்து செயல்படும்’ என எல்.முருகன் தெரிவித்துதார்.
பின்னர் யாழ்ப்பாணம் பொது நூலகம் சென்ற எல்.முருகன், அங்குள்ள அப்துல்கலாம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
MOS @Murugan_MoS received a traditional welcome on his arrival in #Jaffna. He is visiting #SriLanka to attend dedication of #Jaffna Cultural Center to the people. He will interact with a series of dignitaries including President H.E @RW_UNP and stakeholders during the visit. pic.twitter.com/eLCyMAqIcs
— India in Sri Lanka (@IndiainSL) February 9, 2023
இந்திய நிதியுதவியின்கீழ் 250 பேருக்கு உணவு தானியங்களையும் அவர் வழங்கினார். தொடர்ந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்தை அவர் பார்வையிட்டார்.
இந்திய அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள கலாச்சார மையத்தின் திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார். அத்துடன் இலங்கையில் இருந்து புறப்படுவதற்கு முன்னதாக அதிபர் ரணில் விக்ரமசிங்கவை எல்.முருகன் சந்திக்க உள்ளார்.