சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளைப், புகார் தெரிவித்த அடுத்த 24 மணி நேரத்திற்குள் முடக்கக்கோரி மத்திய அரசு, ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களின் நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
உலகளவில் சமூக வலைதளங்களில் உள்ள போலிக் கணக்குகள் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. சைபர் குற்றங்கள் இதன் மூலம் அதிக நடக்கும் வாய்ப்பும் உள்ளது. போலிக் கணக்குகளால் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் நூறு கோடிக்கும் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தியாவில் தொழில்நுட்ப விதிகளின்படி ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூ டியூப் ஆகிய ஆகிய சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளை முற்றிலும் முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. திரைத்துறைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோரின் புகைப்படங்கள் மற்றும் பெயர்களை பயன்படுத்தி போலிக் கணக்குகள் சமூக வலைதளங்களில் ஏறாளாமாக உள்ளது.
திரைத்துறை பிரபலங்களின், ரசிகர்கள் பல பேர் இந்த செயல்களில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக போலி செய்திகளில் திரைப் பிரபலங்கள் உள்படப் பல துறையைச் சேர்ந்தோர் சிக்கிக் கொள்கின்றனர். இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு போலிக் கணக்குகளை, புகார் தெரிவித்த 24 மணி நேரத்தில் முற்றிலும் முடக்க அறிவுறுத்தியுள்ளது.