தேர்வு நேரத்தில் தடையற்ற மின்சாரம்- மின்சாரவாரியம்

தேர்வு நேரங்களில் மின்வெட்டு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரவாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு சில பகுதிகளில் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்கள், எதிர்கட்சி தலைவர்கள் உட்பட பலரும்…

தேர்வு நேரங்களில் மின்வெட்டு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரவாரியம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு சில பகுதிகளில் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்கள், எதிர்கட்சி தலைவர்கள் உட்பட பலரும் குற்றம்சாடினர். இதுகுறித்து அண்மையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இனி மின்வெட்டு ஏற்படாது எனவும், அதற்குரிய நடவடிக்ககைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற்று வரும் சூழலில், மின் வெட்டு ஏற்படுவது மாணவர்களின் படிப்பிற்கு இடையூறு ஏற்படுவதாக பெற்றோர்கள் குற்றம்சாடினர்.

இதையடுத்து அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் ஒரு சுற்றறிக்கை  அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில்,

பத்தாம் வகுப்பு மற்றும் 11, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் பொதுத் தேர்வின் போது தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் தடை ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மாற்று வசதி ஏற்படுத்தவும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் மின்வாரிய அதிகாரிகள் முன்கூட்டியே மின்பாதைகள் குறித்து ஆய்வு செய்திருக்க வேண்டும். பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகத்தை நிறுத்த ஏற்கனவே திட்டமிட்டிருந்தாலும் கூட பொதுத்தேர்வின் போது மின் தடை ஏற்படக்கூடாது.

பொதுத்தேர்வு மையங்களுக்கு அருகில் இருக்கும் மின்மாற்றிகளை ஆய்வு செய்து, பழுதடைந்திருந்தால் உடனடியாக அவற்றை மாற்ற வேண்டும் என மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

வரும் 5 ம் தேதி முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் மின்சார வாரியம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.