தற்போதைய காலகட்டத்தில் திருமணத்திற்கு பெண் கிடைப்பதே 90’ ஸ் கிட்ஸ்களுக்கு அரிதினும் அரிதாக இருப்பதாக சமூக வலைதளங்களில் புலம்பித் தள்ளி வருகின்றனர். ஆனால், இங்கு ஒரு இளைஞர் ஒரே நேரத்தில் 3 பெண்களை திருமணம் செய்துகொண்டுள்ளதுதான் பேசுபொருளாக மாறியுள்ளது.
அண்மையில், காத்துவாக்குல ரெண்டு காதல் படம் போஸ்டர்கள் வெளியான போது, விஜய்சேதுபதி இரண்டு ஹீரோயின்களுடன் இருந்தது 90’s கிட்ஸ்களின் சாபத்தை சம்பாதித்தது. ஆனால், படம் வெளியான பிறகு தான் 90’s கிட்ஸ்களுக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது. விஜய்சேதுபதி கடைசியில் இரண்டு ஹீரோயினுடனும் சேரவில்லை என்றாலும், ‘வாழ்ந்த இப்படி வாழனும்னு’ பல 90’s கிட்ஸ்களின் கனவு படமாக காத்துவாக்குல 2 காதல் அமைந்தது.
இந்த நிலையில், காத்துவாக்குல 2 காதல் படத்துக்கு டஃப் கொடுக்கும் வகையில், மத்தியபிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பழங்குடியினத்தை சேர்ந்த 42 வயதான சமர்த் மௌரியா என்பவருக்கு வெவ்வேறு காலகட்டங்களில் 3 பெண்களுடன் காதல் மலர்ந்துள்ளது. அவர்களுடன் கடந்த 15 ஆண்டுகளாக தனித்தனி வீடுகளில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார்.
அண்மைச் செய்தி: ‘வீடு இடிந்து விழுந்ததில் கர்ப்பிணி உள்பட 2 பேர் உயிரிழப்பு’
தற்போது தனது 6 குழந்தைகள் முன்னிலையில் 3 பெண்களையும் திருமணம் செய்துள்ளார். மோரி பாலியா கிராமத்தில் பழங்குடி வழக்கப்படி மூன்று நாட்கள் வரை நடந்த இந்த திருமணத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு திருமண ஜோடிகளை வாழ்த்தியுள்ளனர்.
இந்த நிகழ்வு குறித்து சமர்த் மௌரியா சொல்லும் போது,
“போபாலில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நன்பூர் கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவரான நான், 2003-இல் எனது முதல் காதலியுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டேன். கடந்த 15 வருடங்களாக மற்ற இரண்டு பெண்களும் திருமணமாகமலேயே வாழ்ந்து வருகிறேன்” கூறினார். இந்த திருமணத்தை கேள்விப்பட்ட 90’ஸ் கிட்ஸ்கள், மனதில் எதையோ வைத்துக்கொண்டு நல்லா இருங்க என வாழ்த்தி வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.









