கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் சபரிவர்மன் என்பவர் குட்கா விற்பனை செய்ததாக கடந்த 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதியாக நீதுமன்ற காவலில் இருந்த சபரி வர்மன் காவல்துறை சிறையிலேயே உயிரிழந்தார். இந்த நிலையில் உயிரிழப்பு குறித்து நேசமணி நகர் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சபரிவர்மனின் உயிரிழப்புக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் கணடனம் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது சபரிவர்மனின் உடற்கூறு ஆய்வு அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் சபரி வர்மனின் உடலில் 19 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், சிறை தலைமை வார்டன் ஜெகன், வார்டன்கள் சிவகுமார், திருவுடை நம்பி ஆகிய மூன்று பேரை காவல்துறை கைது செய்துள்ளது.




