இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டி 20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி 20 தொடரை 4 – 0 என்கிற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டிகள் நேற்று தொடங்கியது.
அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி பர்மிங்கம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் கட்டுப்படுத்தப்பட்ட பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 258 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து 259 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இறுதியில் இந்திய அணி 45.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.




