19 மாநகராட்சிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. ஓசூர், சிவகாசியில் ஆகிய இரண்டு மாநகராட்சியிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பின் விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரையில் தமிழக அரசு தயாரித்த ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டிருந்த வார்த்தைகள் இடம் பெறவில்லை எனவும், ஆளுநர் பாதியில் வெளியேறியது என சட்டப்பேரவையின் முதல்நாளில் பல பரபரப்பு சம்பவங்கள் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத்தொடர்ந்து 2-வது நாளாக தமிழக சட்டசபை நேற்று காலை 10 மணிக்கு கூடியது. அப்போது சபாநாயகர் அப்பாவு, மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான இரங்கல் குறிப்பை படித்து, அவர்களுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அவை நேற்று முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
பேரவையின் 3வது நாள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடியது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப் பேரவைக்கு வருகை வந்தனர். ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வழக்கமான வெள்ளைச் சட்டை அணிந்தே வருகை வந்தனர்.சட்டப்பேரவையில், வினாக்கள் விடைகள் நேரத்தில் உறுப்பினர் ஆர்.பி. உதயகுமார் கேள்விக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதில், திருமங்கலம் நகராட்சியில் பாதாள சாக்கடை செயல்படுத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.
திருமங்கலத்தில் முழுமையாக புதிதாக பாதாள சாக்கடை அமைக்க ரூ 400 கோடி செலவாகும். தொடர்ந்து அதை பராமரிக்க வருவாய் இருக்கிறதா? என்பதை கண்டறிய வேண்டும். 19 மாநகராட்சிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. ஓசூர், சிவகாசியில் ஆகிய இரண்டு மாநகராட்சியிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பின் விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்று கூறினார்.