கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கஞ்சா போதை பழக்கம் தலை விரித்து ஆடுவதாகவும் காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை.
விளாத்திகுளம் பகுதியில் 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். கொங்கு மண்டலத்தில் முதிய தம்பதியினரை குறி வைத்து கொலை சம்பவம், நாங்குநேரியில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் கஞ்சா போதை கும்பல் அட்டகாசம் என கஞ்சா சாமிகளின் குற்றங்கள் கட்டுக்கடங்காமல் செல்வதால் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் திமுகவின் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் குடிநீர் கட்டணம், சொத்துவரி போன்ற பல்வேறு வரி உயர்வை மக்கள் மீது தினித்து மக்கள் சொல்ல முடியாத அளவுக்கு துயரத்திலும் கோபத்திலும் உள்ளனர். எப்போது தேர்தல் வரும், திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என காத்திருக்கின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளார்.







