முக்கியச் செய்திகள் உலகம்

”ஆப்கன் மக்களை கைவிட முடியாது” – ஐநா

ஆப்கானிஸ்தானில் தீவிரவாத குழுக்கள் விரிவடைவதை கண்டிப்பாக தடுக்க வேண்டும் எனவும், அந்நாட்டின் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதை தலிபான்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதும், 20 ஆண்டுகள் கழித்து தாலிபான் அமைப்பினர் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்தனர். தாலிபான்கள் இஸ்லாமியத்தின் ஷரியத் சட்டத்தைப் பின்பற்றுவர். அதனால் ஆப்கனை கைப்பற்றியதிலிருந்தே பல பிற்போக்குத் தனமான உத்தரவுகளைத் அவர்கள் பிறப்பித்தனர். மனித உரிமைகளை, முக்கியமாக பெண் உரிமைகளைப் பறிப்பதில் குறியாக இருந்ததால் தாலிபான் அமைப்பினர் பிற நாடுகளிடம் இருந்து வெறுப்பையே சம்பாதித்தனர். 1996-2001ல் இருந்த முதல் தாலிபான் அரசில் பல பிற்போக்கான விதிகளை நிலைநாட்டியதால் உலக நாடுகள் தற்போது வரை தாலிபான் அரசை அங்கீகரிக்கவில்லை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அண்மைச் செய்தி: சென்னையில் 24 மணி நேர கண்காணிப்பு: 45 பறக்கும் படைகள் அமைப்பு

தற்போது ஆட்சியை பிடித்த பின்பு, பெண்களுக்கான உரிமைகளை பறிப்பது, வன்முறையை கொண்டு மக்களை அச்சுறுத்தி வருவது, விலைவாசிகளை உயர்த்துவது, பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் தடைகளை விதிப்பது, பத்திரிகையாளர்களை கொலை செய்வது போன்ற பல அட்டூழியங்களை செய்து வந்தனர்.

இந்நிலையில், ஆப்கன் கடும் பஞ்சத்தில் தத்தளித்து வருகிறது. மேலும், உணவிற்காக சொந்த குழந்தைகளை விற்கும் அவல நிலைக்கும் ஆப்கன் மக்கள் தள்ளப்பட்டனர். இதனால் தாலிபான்கள் பிற நாடுகளிடம் உதவிக் கரம் வேண்டி நின்றுக் கொண்டிருக்கும் நிலை இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் நிலையை குறித்து ஐநா கவலை தெரிவித்து வருகிறது. அவ்வகையில், ஆப்கனில் நிலவும் வன்முறைகளை மேற்கோள் காட்டி, ஆப்கானிஸ்தான் மக்களை கைவிட முடியாது என ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் உலகளாவிய பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அன்டோனியோ குட்டரெஸ், தீவிரவாத அமைப்புகள் வளருவதற்கு வளமான இடமாக ஆப்கானிஸ்தான் உள்ளது எனக் குற்றம்சாட்டினார். மேலும், ஆப்கானிஸ்தானுக்கு சர்வதேச நாடுகள் உதவாவிட்டால் பிராந்தியமும் உலகமும் மிகப்பெரும் விலையை கொடுக்க நேரிடும் என எச்சரித்த அவர், ஆப்கன் மக்களை கைவிட முடியாது என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காங்கிரசின் அடுத்த தலைவர் யார்? தெளிவாக இருக்கும் ராகுல்… குழப்பத்தில் தொண்டர்கள்…

Jayakarthi

அதிமுக விவகாரம்; உயர்நீதிமன்றத்தில் சசிகலா வாதம்

EZHILARASAN D

தவறான உணவை சாப்பிட்டால், தவறான பாதையில் செல்வீர்கள் – மோகன் பகவத்

Web Editor