முக்கியச் செய்திகள் உலகம்

’தயவு செய்து அனுமதிங்களேன்..’கழிவு நீரில் நின்றபடி அமெரிக்கப்படையிடம் கெஞ்சும் ஆப்கானிஸ்தானியர்கள்!

முட்டளவு கழிவு நீரில் நின்றபடி, விமான நிலையத்துக்குள் அனுமதிக்கும்படி, அமெரிக்கப் படையினரிடம் ஆப்கானிஸ்தானியர்கள் கெஞ்சும் காட்சிகள், நெஞ்சை உருக்குவதாக உள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள், வெளியேறுவதை அடுத்து அங்கு
தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்குள்ள மக்கள் வெளிநாடு களுக்குத் தப்பி செல்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடியுள்ளனர். அங்கு கூட்டம் நிரம்பி வழிகிறது.

உரிய ஆவணங்களின்றி விமான நிலையத்துக்குள் செல்ல முடியாமல் ஏராளமானோர் விமான நிலையத்தைச் சுற்றிக் காத்துக் கிடக்கின்றனர். காபூல் விமான நிலையத்தின் காம்ப வுன்ட் சுவர் அருகே முட்டளவு கழிவு நீர் செல்கிறது. அதில் நடந்துகொண்டு, பேப்பரில் எழுதிக் காண்பித்தும் கத்தியபடியும் அமெரிக்க ராணுவத்திடம் ஆப்கானிஸ்தானியர்கள் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கும்படி கெஞ்சுகின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள், சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருவது நெஞ்சை உருக்குவதாக இருக்கிறது.

இந்நிலையில், காபூல் விமான நிலையத்துக்கு ஆப்கானிஸ்தானியர்கள் செல்வதை தடுப் போம் என்றும் வெளிநாட்டவர்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, காபூல் விமான நிலையத்துக்குச் செல்லும் சாலையை தலிபான்கள் அடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement:
SHARE

Related posts

மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அக்.31 வரை தடை

Saravana Kumar

ஜோபைடனுக்கு போட்டியாக ட்ரம்ப்புக்கு பதவி ஏற்பு விழா… ட்ரம்ப் ஆதரவாளர்கள் அதிரடி திட்டம்…!

Nandhakumar

நேற்று ஒரே நாளில் 165 கோடி ரூபாய்க்கு மது விற்பனை!

Vandhana