விரைவில் வெளியாகும் ஓலா இ-கார்?

தனது முதல் இ-காரின் மாதிரி புகப்படத்தை ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் வெளியிட்டிருக்கிறார். ஓலா நிறுவனம் 2010ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது முதலில் விரைவாகவும், சுலபமாகவும் கிடைக்கும் டாக்ஸியாக…

தனது முதல் இ-காரின் மாதிரி புகப்படத்தை ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் வெளியிட்டிருக்கிறார்.

ஓலா நிறுவனம் 2010ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது முதலில் விரைவாகவும், சுலபமாகவும் கிடைக்கும் டாக்ஸியாக தான் இருந்தது. பிறகு கார்கள் மட்டுமின்றி ஆட்டோக்கள், மோட்டார் வாகனங்களையும் தனது டாக்சி சேவைக்குள் வைத்தது. இதனால் மக்கள் அனைவரும் அவர் அவரின் பணம் மற்றும் பயணம் செய்யும் நாபர்களின் எண்ணிகைக்கு ஏற்ப இந்த நிறுவனத்தின் டாக்சிகளை பயன்படுத்தி வந்தனர். பிறகு, வாகனங்களை வாடைக்கு அளிக்கும் வசதிகளும் இதில் வந்தது. இதுவரை போக்குவரத்து துறையில் மட்டும் இருந்த ஓலா பிறகு வாகன தயாரிப்பில் ஈடுப்பட்டது.

https://twitter.com/bhash/status/1485885065276301312

வாகன தயாரிப்பில் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திருக்கும் நிறுவனம் தான் ஓலா. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தனது இ-ஸ்கூட்டர் விற்பனையை தொடங்கியது ஓலா. விற்கத் தொடங்கிய முதல் நாளிலேயே 600 கோடி மதிப்பிலான ஸ்கூட்டர்களை விற்று, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. விற்பனை துவங்கியது முதல் ஒவ்வொரு நொடிக்கும் 4 ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டதாக பாவிஷ் அகர்வால் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இ-ஸ்கூட்டர் உற்பத்தியில் தாமதங்கள் இருந்தாலும், இதன் வாகனங்கள் தரமானதாகதான் இருந்து வருகிறது. இந்நிலையில், எலெக்ட்ரிக் வாகனங்களின் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்காக எலெக்ட்ரிக் காரையும் தாயாரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மைச் செய்தி: ”ஆப்கன் மக்களை கைவிட முடியாது” – ஐநா

இது குறித்து, ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால், அந்த இ-காரின் மாதிரி புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே 2023ஆம் ஆண்டில் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரும் என இவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், டெஸ்லாவின் இ-கார் இந்தியாவிற்கு வரமுடியாத நிலையில், ஓலா நிறுவனம் இந்த பணியில் ஈடுப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது மாதிரி புகைப்படத்தை மட்டுமே வெளியிட்டுள்ள ஓலா நிறுவனம், விரைவில் இந்த கார் பற்றிய முக்கிய அப்டேட்களையும் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.