“18 வருடங்களுக்குப் பிறகு, எனது அப்பா, மகனாக எனது விரலை பிடித்திருக்கிறார்” – சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தன்னுடைய தந்தையே தனக்கு மீண்டும் பிறந்துள்ளதாக சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நெறியாளராக பணி செய்து,…

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தன்னுடைய தந்தையே தனக்கு மீண்டும் பிறந்துள்ளதாக சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நெறியாளராக பணி செய்து, தனது நகைச்சுவை திறமையாலும், பல குரலில் பேசும் மிமிக்கிரி திறமையாலும் சினிமா பட வாய்ப்புகள் கிடைத்தது. முதன் முதலில் தனுஷ் ஹீரோவாக நடித்த 3 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சிவகார்த்திகேயன். தனது திறமையால் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்து முன்னணி நடிகரார வலம் வருகிறார். நடிகர் விஜய்க்கு அடுத்தப்படியாக குழந்தைகளை அதிகம் கவர்ந்த நடிகராக சிவகார்த்திகேயன் உள்ளார். இவரது படங்களை குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் வந்து பார்பது வழக்கம். இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தனது மனைவி, மகளுடன் சிவகார்த்திகேயன்

இவருக்கு ஆராதனா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், 18 வருடங்களுக்குப் பிறகு, எனது அப்பா, மகனாக எனது விரலை பிடித்திருக்கிறார் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். பல ஆண்டுகால வலியை போக்க, தன் உயிர்வலி தாங்கிய மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த் துளிகளால் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அம்மாவும் குழந்தையும் நலமுடன் இருப்பதாகவும் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.