உக்ரைனின் வடக்கு மாகாணத்தில் செர்னிஹிவ் பகுதியில் ரஷ்யாவின் விமானத்தை உக்ரைன் படை வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த பிப். 24ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்த போரில் உக்ரைன் நாட்டைச் சார்ந்த ஏராளமானோர் பலியாகியுள்ளனர் என்று ஐநா தெரிவித்துள்ளது. இரு நாடுகளிடையே நடக்கும் போரில் ஒருவரை ஒருவர் விடாமல் ஆக்ரோஷமாக தாக்கி வருகின்றனர். இந்த போரை நிறுத்தவேண்டுமென மற்ற நாட்டு மக்கள் நினைத்த போதும் உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகள் இதற்கான முன்னெடுப்புகளில் தோய்வையே சந்தித்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் உக்ரைனின் வடக்கு மாகாணத்தில் செர்னிஹிவ் பகுதியில் பறந்துகொண்டிருந்த, ரஷ்யாவின் விமானம் ஒன்றை உக்ரைன் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இது குறித்த வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது அந்நாட்டு பாதுகாப்பு படை. மேலும் ரஷ்யாவைச் சேர்ந்த 5 விமானங்கள் மற்றும் 4 ஹெலிகாப்டர்களை சுட்டு அழித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், நடைபெற்றுவரும் இந்த போரில் இதுவரை 44 விமானங்கள் உட்பட பல ஹெலிகாப்டர்களையும் தாக்கி அழித்துள்ளது உக்ரைன் பாதுகாப்பு படை.