உக்ரைன் – ரஷ்யா இடையே நடந்துவரும் போரால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீதான விலை விரைவில் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த சில தினங்களாக போர் நடந்து வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளில் ஏற்றுமதி, இறக்குமதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போரின் காரணமாக ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துகொள்ளும் நாடுகள் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வரிசையில் இந்தியாவிலும் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் கச்சா எண்ணெய் பேரல் ஒன்று 80 முதல் 90, 100 டாலராக விற்கப்பட்ட கச்சா எண்ணெயானது போர் காரணமாக 100 டாலரையும் தாண்டி விற்பனையாகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக அடுத்த வாரம் முதல் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் என துறை சார்ந்த வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். 2021ம் ஆண்டின் நவம்பர் 4ம் தேதியிலிருந்து பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனையாகிவருகிறது. இந்த விலையானது கடந்த பிப் 24ம் தேதி தொடங்கிய உக்ரைன் – ரஷ்யா போரால் உயர வாய்ப்புள்ளதாக நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்டது.
கச்சா எண்ணெய் விலையும் தற்போது 116 டாலராக உயர்ந்துள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்த நெருக்கடியால் 5 மாநில தேர்தல் முடிவுக்குப் பிறகாக எரிபொருட்கள் மீதான விலை 10 முதல் 12 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எண்ணெய் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் இதுகுறித்து பேசுகையில், “பெட்ரோல், டீசல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் நாங்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.
உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக சந்திக்கும் நெருக்கடியால் நான்கு மாதமாக விலை உயராத பெட்ரோல், டீசல் விலையானது 5 மாநில தேர்தலுக்கு பிறகு கடுமையாக உயரும் என்கின்றனர் வல்லுனர்கள்.