கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே வெளிநாடுகளுக்குப் பயணிக்க இயலும் என்ற விதிமுறையை அமல்படுத்த லண்டன் அரசு தனது முதல் படியை எடுத்து வைத்துள்ளது. இதற்கான பிரத்தியேக செயலியை அந்நாட்டுப் போக்குவரத்துத் துறை உருவாக்கி உள்ளது.
கொரோனா தொற்று உலக நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா தொற்று சினாவில் உள்ள வூஹானில் முதலில் தென்பட்டது. அங்கிருந்து வெளிநாடுகளுக்குப் பயணம் செய்தவர்களின் மூலமாக உலகம் முழுவதும் பரவியது. வரலாறு காணாத பதற்றத்தை கொரோனா தொற்று உலக நாடுகளுக்குக் கொடுத்தது. இதனால் சர்வதேச அளவிலான விமான போக்குவரத்துக்குத் தடைவிதிக்கப்பட்டது. இதன்மூலம் கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர அனைத்து நாடுகளும் முயறசித்தன. கொரொனா தொற்றின் பரவல் குறைந்ததும் மீண்டும் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்கியது. இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது.
சர்வதேச அளவில் ஆராய்ச்சியாளர்கள் செய்த தொடர் ஆய்வுகளின் விளைவாக கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் உலக நாடுகள் முழுவதும் தங்களது மக்களுக்கு கொரோனா தடுப்பூசியைச் செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இஸ்ரேல் நாடு மக்கள் தொகையில் 81 % தடுப்பூசி செலுத்திவிட்டது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தினால் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்த சான்றிதழ் எதற்குப் பயன்படும் என்ற கேள்வி அனைவருக்கும் இருந்தது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் இனி வெளிநாடுகளுக்குச் செல்வதில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. லண்டன் போக்குவரத்துத் துறை என்எச்எஸ் ( National Health Service )என்ற செயலியை உருவாக்கி உள்ளது. லண்டனில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மக்களின் விவரங்கள் மற்றும் கொரோனா பரிசோதனை செய்துகொண்ட நபர்களின் விவரங்கள் முன்பே பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும்.
லண்டனிலிருந்து யாரேனும் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய நினைத்தால் இந்த செயலி மூலம் அவர்கள் தொடர்புகொள்ளும்போது, பதிவுசெய்யப்பட்ட விவரங்களை நினைவுபடுத்திக்கொண்டு, யாரெல்லாம் வெளிநாடுகளுக்குச் செல்லத் தகுதியானவர்கள் என்பதைக் கண்டறிய முடியும். இந்த செயலியைச் சர்வதேச அளவில் கொண்டு செல்லும் முயற்சியை லண்டன் போக்குவரத்துத் துறை மேற்கொள்ள உள்ளது. ஜி7 நாடுகளின் போக்குவரத்து அமைச்சர்களுடன் லண்டன் அரசு விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
எந்த நாடுகளுக்கெல்லாம் பயணம் செய்யலாம் என்ற படியலை லண்டன் போக்குவரத்துத் துறை அடுத்த மாதம் உருவாக்க உள்ளது.







