முக்கியச் செய்திகள் தமிழகம்

உயர்கல்வி மாணவர்களுக்கு இணையவழி கல்வி: யுஜிசி

உயர்கல்வி மாணவர்களுக்கு அவர்களின் பாடத்திட்டத்தின்படி 40 சதவீத பாடங்கள் ‘ஸ்வயம்’ போன்ற இணையவழி கல்வித் திட்டம் வழியாக நடத்தப்படும் என்றும் எஞ்சிய 60 சதவீத பாடங்கள் நேரடி வகுப்புகள் மூலம் நடத்தப்படும் என பல்பலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “உயர்கல்வி மாணவர்களுக்கு அவர்களின் பாடத்திட்டத்தின்படி 40 சதவீத பாடங்கள் ‘ஸ்வயம்’ போன்ற இணையவழி கல்வித் திட்டம் வழியாக நடத்தப்படும் என்றும் எஞ்சிய 60 சதவீத பாடங்கள் நேரடி வகுப்புகள் மூலம் நடத்தப்படும். அதேபோல, மாணவர்களுக்கான தேர்வுகளும் 40, 60 சதவீத அடிப்படையிலேயே நடத்தப்படும் என்றும்,

இதற்குத் தேவையான கட்டமைப்புகளைக் கல்லூரிகள் அளவில் உருவாக்க நிதிகள் ஒதுக்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு உரியப் பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள் தங்களின் கருத்துகளை pollicyfeedbackugc@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு ஜூன் 6-ம் தேதிக்குள் அனுப்பலாம் என்றும் யுஜிசி அறிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை,127 கோடி பணம் பறிமுதல்!

Jeba Arul Robinson

புதிய கட்சிகள்: அவகாசத்தை 7 நாட்களாக குறைத்த தேர்தல் ஆணையம்!

Jeba Arul Robinson

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் அமெரிக்கப் படைகள்: ஜார்ஜ் புஷ் கண்டனம்

Gayathri Venkatesan