‘எங்கள் கல்யாணம் ‘மாஸ்க்’ கல்யாணம்’

தெலங்கானா மாநிலத்தில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பூ மாலைக்கு பதிலாக மாஸ்க் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்ட நிகழ்வு வைரலாகியுள்ளது. தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் உள்ள நர்சாபூர் கிராமத்தைச் சேர்ந்த…

தெலங்கானா மாநிலத்தில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பூ மாலைக்கு பதிலாக மாஸ்க் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்ட நிகழ்வு வைரலாகியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் உள்ள நர்சாபூர் கிராமத்தைச் சேர்ந்த ரவிகாந்த் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீ ஜனா என்ற பெண்ணுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்த திருமண நிகழ்ச்சில், குறைந்த அளவிலான குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்துகொண்டனர். இதில் மணமக்கள் பூமலைக்கு பதிலாக மாஸ்க் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

இதுகுறித்து மணமக்கள் தெரிவிக்கையில் மாஸ்க் எவ்வளவு முக்கியம் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், புதுமையாக மாஸ்க் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தனர். கொரோனாவை தடுக்க, பொது இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.