உதயநிதி ஸ்டாலின் vs ஆதவ் அர்ஜுனா காரசார விவாதம்!

சட்டப்பேரவையில் கோவை மாணவர் கொலை வழக்கு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியதும் திமுக சார்பில் கோவை மாணவர் கொலை செய்யப்பட்டது குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுணா பதிலளித்து பேசியதாவது, “கடந்த 2020ம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் இல்லை. போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்ததால்தான் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரிக்கிறது. திமுக ஆட்சியில் போதைப்பொருள், பாலியல் வன்கொடுமை அதிகரித்தது. திமுக ஆட்சியில் போக்சோ வழக்குகள் 40 சதவீதம் அதிகரித்துள்ளன. திமுக ஆட்சியில் காவல்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் பேசுகிறேன். தவெகவின் அறிக்கை அல்ல.

போதைப்பொருள் அதிகரிப்பு காரணமாகத்தால் திமுகவை மக்கள் தூக்கி எரிந்துள்ளனர். தவெக ஆட்சியில் போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர் கொலை வழக்கில் காவல்துறையின் அறிக்கையா? அல்லது இறந்தவர்களின் தாயா? என்றால், எங்கள் முதல்வர் அந்த தாயின் பக்கம் தான் இருப்பார். எந்த அழுத்தத்திற்கும் இடம் தரமாட்டோம்.” என்றார்.

இதற்க்கு பதிலளித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “கடந்த ஒரு வாரத்தில் போதைப்பொருட்களால் எவ்வளவு கொலைகள் நடந்துள்ளன என்பதை கூறினோம். நாங்கள் கேட்டதற்கு பதில் சொல்லாமல், உங்கள் ஆட்சியில் இது நடந்தது, அது நடந்தது எனக் கூறுகின்றனர். தி.மு.க. ஆட்சியில் நடந்த குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. த.வெ.க. அரசு எடுத்த நடவடிக்கை என்ன?.

போதைப்பொருளுக்கு எதிராக தி.மு.க. எடுத்த நடவடிக்கை, விழிப்புணர்வு செய்த டேட்டா அவரிடம் இருக்கிறது. தி.மு.க. நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அமல்ராஜை எதற்காக ஆணையர் பதவியில் அமர்த்தியுள்ளீர்கள்? போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களக்கு முதல்வர் விருது வழங்கினார். கடந்த ஓராண்டாக சிறப்பாக செயல்பட்ட 15 பேருக்கு முதலமைச்சர் விஜய் விருது வழங்கினார். போதைப்பொருள் ஒழிப்புக்கு திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஏன் விருது வழங்கினீர்கள்? என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.