தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்துடன் காணப்படுகிறது. நேற்று நேற்று முன்தினம் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,220-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.1,13,760-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.14,270-க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,14,160 விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலை வெள்ளி விலை மாற்றமின்றி காணப்படுகிறது. அதன்படி, சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2.55 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.




