உடையார்குடி முத்துமாரியம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

காட்டுமன்னார்கோவிலில் அமைந்துள்ள உடையார்குடி மாரியம்மன் திருக்கோயில் ஆடி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு மாரியம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். காட்டுமன்னார்கோவிலில் உள்ள  பிரசித்தி பெற்ற உடையார்குடி மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த…

காட்டுமன்னார்கோவிலில் அமைந்துள்ள உடையார்குடி மாரியம்மன் திருக்கோயில் ஆடி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு மாரியம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

காட்டுமன்னார்கோவிலில் உள்ள  பிரசித்தி பெற்ற உடையார்குடி மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவிற்கு சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து விழாவை காணஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். மேலும் ஒவ்வொரு ஆண்டும்  பாடை கட்டி இழுத்தல், செடல், காவடி, எடுத்து தீ குழி இறங்குதல் போன்ற வேண்டுதல்களை பக்தர்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வருட ஆடி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு,
திருக்கோயில் முன்பு கடந்த 13 ஆம் தேதி கொடி சீலை ஏற்றப்பட்டு , அம்மனுக்கு
காப்பு கட்டி விழாவானது தொடங்கியது. அன்று முதல் கடந்த 6 நாட்களாக அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து  பக்தர்களுக்கு காட்சி அளித்தார் . அதனையடுத்து ஏழாம் நாள் திருவிழாவில் முத்து மாரியம்மன் புஷ்ப பல்லக்கு
வீதி உலா காட்சி நடைபெற்றது. புஷ்ப பல்லக்கு காட்டுமன்னார்கோவில் மோட்டார் சங்கம் சார்பில் விமர்சையாக வருடம் தோறும் நடைபெறும். அந்த வகையில் வானவேடிக்கையுன் சட்டி மேளம் முழங்க அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதில் 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர், இளைஞர்கள் ஆடல் பாடலுடன் அதிவிமர்சையாக பல்லக்கு மக்கள் வெள்ளத்தில் மிதந்து சென்றது. நாளை காலை அம்மன் திருத்தேர் வீதியுலா  மற்றும்  22ஆம் தேதி காலை செடல், காவடி திருவிழாவும்  மாலை 5 மணிக்கு தீமிதி திருவிழா நடைபெறும் என இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.