முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

‘மில்க் டீ அலையன்ஸ்க்கு’ஆதரவாக ‘எமோஜி’ வெளியிட்ட ட்விட்டர்!

ஹாங்காங், மியான்மர் மற்றும் தாய்லாந்து போராட்டக்காரர்கள் உருவாக்கிய ‘மில்க் டீ அலையன்ஸ்’ குழுவுக்கு ஆதரவாக ட்விட்டர் நிறுவனம் புதிய எமோஜி ஒன்றை வெளியிட்டுள்ளது.

சீன அரசை எதிர்த்து கடந்த 2019-ம் ஆண்டு ஹாங்காங்கை சேர்ந்த இளைஞர்கள் ஏராளமானோர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக மியான்மர், தாய்லாந்து மற்றும் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்களும் சீன அரசை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக ஹாங்காங், மியான்மர் மற்றும் தாய்லாந்து இளைஞர்கள்‘மில்க் டீ அலையன்ஸ்’ என்ற போராட்டக் குழுவை உருவாக்கினார்கள். சர்வாதிகாரத்துக்கு எதிராக இந்த அமைப்பினர் தங்களுடைய நாட்டில் நடக்கும் போராட்டங்களில் போது #MilkTeaAlliance என்ற பெயரில் ஹாஷ்டக் உருவாக்கி ட்ரெண்டிங்க செய்துவழக்கம்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் முக்கிய நிறுவனமான ட்விட்டர் நிறுவனம் ‘மில்க் டீ அலையன்ஸ்’ போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக புதிய எமோஜி ஒன்றை உருவாக்கியுள்ளது.

‘மில்க் டீ அலையன்ஸின் முதலாம் ஆண்டு இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி இந்த புதிய எமோஜியை ட்விட்டர் உருவாக்கியுள்ளது.
இனிமேல் ட்விட்டர் வலைத்தளத்தில் ‘மில்க் டீ அலையன்ஸ்’ என ஹாஷ்டக் உருவாக்குவதற்கு பதில் இந்த எமோஜியை பயன்படுத்தலாம் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல் சீன, தாய்லாந்து, மியான்மர் உள்ளிட்ட நாடுகளின் மொழியில் ‘மில்க் டீ அலையன்ஸ்’ என டைப் செய்தாலும் இந்த புதிய எமோஜி வெளிப்படும் வகையில் ட்விட்டர் இந்த புதிய எமோஜியை உருவாக்கியுள்ளது.

Advertisement:

Related posts

யூடியூபர் மதனின் ஜாமீன் தள்ளுபடி

Gayathri Venkatesan

15 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்: முதல்வர் பழனிசாமி

Ezhilarasan

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நிலவரம்!

Vandhana