தொழில்நுட்பம்

விவசாயிகள் போராட்டம்; பயனர்களின் பக்கத்தை முடக்கிய ட்விட்டர்..!

மத்திய அரசின் அறிவுறுத்தல்படி, வேளாண் சட்டங்கள் குறித்து தவறான தகவல் பரப்புபவர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டது. தற்போது அதுகுறித்து ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

பார்படாஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா. இவர் டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் குறித்து சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரையடுத்து இளம்வயது சூழலியல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பர்க், நடிகை மியா கலிஃபா உள்ளிட்ட பலரும் ட்விட்டரில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவளித்தனர். இதைத்தொடர்ந்து ட்விட்டரில் விவசாய போராட்டத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் பலரும் கருத்திட ஆரம்பித்தனர்.

தற்போது பலரும் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து மத்திய அரசு ட்விட்டரில் வேளாண் சட்டம் குறித்து அவதூறாக கருத்து பதிவிடுபவர்களின் கணக்குகளை முடக்க ட்விட்டருக்கு வலியுறுத்தியது. இந்நிலையில், வேளாண் சட்டம் குறித்து அவதூறு கருத்திட்ட சுமார் 500க்கும் மேற்பட்டவர்களின் கணக்குகளை ட்விட்டர் முடக்கியுள்ளது. அத்துடன் அதற்கு விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளது.

அதில், ட்விட்டர் மக்களின் கருத்து சுதந்திரத்துக்கு வழிவகுக்கும் ஒரு தளம். தற்போது ட்விட்டர் விதிமுறைகளை மீறி தங்களது கருத்துக்களை பதிவிட்டவர்களின் நூற்றுக்கணக்கானவர்களின் கணக்குகளின் மேல் நடவடிக்கை எடுத்துள்ளோம். ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்காணக்கான கருத்துக்கள் ட்விட்டரில் பதிவிடப்படுகின்றன. அவர்களின் கருத்து சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கும் அதேவேலையில், அந்தந்த நாடுகளின் விதிமுறைகளையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

குழந்தைகளுக்காக உருவாகும் இன்ஸ்டாகிராம் கிட்ஸ் செயலி!

Gayathri Venkatesan

மத்திய அரசின் புதிய விதிமுறைகளுக்கு எதிராக வாட்ஸ் அப் வழக்கு!

Halley karthi

இந்திய ஏவுகணைகளின் புதிய அப்டேட்; மிரளும் அண்டை நாடுகள்!

Niruban Chakkaaravarthi

Leave a Reply