முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

துணை வேந்தர்கள் நியமனம்: “அவசர அறிவிப்பு ஆளுநர் பதவிக்கு அழகல்ல!” – துரைமுருகன்

“பல்கலைக்கழக துணை வேந்தர்களை அவசர அவசரமாக அறிவித்திருப்பது ஆளுநர் பதவிக்கு அழகல்ல என்றும் புதிய அரசு அமைந்த பிறகு பதவிகளை நிரப்பினால் இமயமலை இரண்டாக பிளந்து விடுமா?” எனத் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கேள்வியெழுப்பி உள்ளார்.

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில்,

“தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 6.4.2021 அன்றுதான் நடந்து முடிந்திருக்கிறது. வாக்கு எண்ணிக்கைக்கு இடைப்பட்ட இந்த ஒரு மாதம் காலம் எந்த முடிவு எடுக்காமல் இருப்பது தான் மரபு. புதிய அறிவிப்புகளை, அதுவும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் அதன் நிர்வாகப் பொறுப்பை பல ஆண்டுகளுக்கு ஏற்க போகும் துணை வேந்தர்களின் பெயர்களை ஆளுநர் அவசர அவசரமாக வெளியிட்டு இருப்பது அவர் பதவிக்கு அழகல்ல.

காந்திராம கிராமிய பல்கலைக்கழக துணை வேந்தராக எஸ். மாதேஸ்வரன், கால்நடை பல்கலைக்கழக துணை வேந்தராக டாக்டர் செல்வகுமார் ஆகிய இரண்டு பேரையும் ஆளுநர் அறிவித்ததுள்ளார்.

பல நாட்களாக நிரப்படாமல் இருந்த இந்த பதவிகளை புதிய அரசு வந்து நிரப்பினால் இமயமலை என்ன இரண்டாகவா பிளந்து விடுமா? இந்த இரண்டு போதாது என்று தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாய உறுப்பினராக, கிரிஜா வைத்தியநாதனை மத்திய அரசு அதன் பங்கிற்கு நியமித்து இருக்கிறது.

தேர்தல் வருவதற்கு முன்பு இருந்த நடைமுறையில் இருந்த விஷயங்கள்தான் இவைகள். இதில் எந்த அரசியல் நோக்கமும் கிடையாது என்று ஆயிரம் காரணங்களை ஆளுநர் மாளிகை கூறினாலும், பொறுத்ததுதான் பொறுத்தீர் இன்னும் ஏன் ஒரு மாத காலம் பொறுக்க கூடாது என்பதுதான் எமது கேள்வி.முறையான துணை வேந்தர்களை நியமிக்காததால், அகில உலக புகழ் பெற்ற சென்னை பல்கலைக்கழகம் எப்படி சீர்கெட்டு அழிந்து நிற்கிறது என்பதை பல்வேறு ஊடகங்கள் எடுத்துக் காட்டி இருக்கிறது. முடிந்தால் ஆளுநரின் செயலாளர்கள் ஆளுநர் பார்வைக்கு கொண்டு செல்லட்டும்.இந்த அவசரம் ஆளுநருக்கு அழகல்ல!” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் புதிதாக 3,715 பேருக்கு கொரோனா தொற்று

Gayathri Venkatesan

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்: 217 ரன்களில் சுருண்டது இந்திய அணி!

Vandhana

ஆப்கானிஸ்தானில் 3 பெண் ஊடகவியலாளர்கள் சுட்டுக்கொலை!

Jeba Arul Robinson