தேர்தல் காரணமாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்ததாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனோ பெருந்தொற்று வேகமாக பரவுவது மிகவும் வேதனையளிப்பதாகவும், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்கூடங்களால் முழு ஊரடங்கை தாங்க முடியாது எனவும் கூறினார். கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் துரிதமாக செயல்பட வேண்டும் என வலியுறுத்திய கிருஷ்ணசாமி, கொரோனோ அறிகுறிகள் தென்பட்டால் உடனே சிகிச்சையை தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், முகக்கவசம் அணியவில்லை என்றால் அவர்களுக்கு முகக்கவசம் கொடுக்க வேண்டுமே தவிர, அபராதம் விதிக்க கூடாது என அவர் அறிவுறுத்தினார். தேர்தல் காரணமாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்ததாகவும், 6 மாதங்களுக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருந்தால் பாதிப்பு ஏற்பட்டிருக்காது எனவும் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு முதலில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என கிருஷ்ணசாமி குறிப்பிட்டார்.







