முக்கியச் செய்திகள் உலகம்

பயணிகளின் பாதுகாப்பான கவனத்திற்கு!

ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட பயணி ஒருவர் கொரோனா நோய் தொற்று காரணமாக முழு பாதுகாப்பு உடையில் விமானத்தில் பயணம் மேற்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

உலக முழுவதும் கொரோனா நோய் தொற்றால் 13,89,29,666 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2,98,7,948 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக பல்வேறு நாடுகளில் மீண்டும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.

நாடுகளுக்கு இடையிலான விமான போக்குவரத்தும் முறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட பயணி ஒருவர் கொரோனா நோய் தொற்று காரணமாக முழு பாதுகாப்பு உடையில் விமானத்தின் இருக்கைகயின் படுத்துக்கொண்ட பயணம் மேற்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

கொரோனா நோய் தொற்று காரணமாக ஐரோப்ப விமானங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் கவனமாக மேற்கெள்ளப்படுகிறது. விமானத்தில் குறைந்த எண்ணிக்கையில் மட்டும் பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு பயணியும் விமானத்தில் நுழைவதற்கு முன்பு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த படத்தை நேஷனல் ஜோகிரபி டிரவல் தொலைக்காட்சி படம் பிடித்துள்ளது.

Advertisement:

Related posts

“வருடத்திற்கு ஆறு சமையல் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்”: அமைச்சர் சரோஜா

Karthick

கொரோனா சிகிச்சை உபகரணங்கள் இறக்குமதிக்கான வரிவிலக்கு நீட்டிப்பு!

Saravana Kumar

தனியார் பரிசோதனை மையங்களுக்கு எச்சரிக்கை!