முக்கியச் செய்திகள் இந்தியா

ரஷ்ய தடுப்பூசி அனுமதிக்கு ராகுல் ரியாக்‌ஷன் என்ன?

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் -வி தடுப்பூசிக்கு  மத்திய அரசு அவசர கால அனுமதி அளித்தது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் அதிகப்படியான மக்கள் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில்  தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவில் தற்பொழுது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. 

மேலும், தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக்- வி  தடுப்பூசிக்கு அவசர கால ஒப்புதல் அளிக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தனர். இதனையடுத்து ஸ்புட்னிக் – வி தடுப்பூசிக்கு மத்திய அரசு மருந்து பொருட்கள் கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

முன்னதாக வெளிநாட்டு தடுப்பூசிகளை செலுத்துவதற்கு அனுமதிக்க வேண்டுமென ராகுல் காந்தி பிரதமருக்கு கடிதம் எழுதினார். தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவாகச் செயல்படுத்த வேண்டும் எனவும் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்திருந்தார். இதற்கு மத்தியில் ஆளும் பாஜக அவரை கடுமையாக விமர்சித்தது.  

இந்நிலையில் தற்போது ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பான செய்தியை தனது ட்விட்டரில் பகிர்ந்து ராகுல் காந்தி கருத்து ஒன்றினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் கூறியதாவது  “முதலில் அவர்கள் உன்னைக் கண்டுகொள்ள மாட்டார்கள், பிறகு உன்னைப் பார்த்துச் சிரிப்பார்கள், பின் உன்னுடன் சண்டையிடுவார்கள், இறுதியில் நீயே வெல்வாய்” என்று கூறியுள்ளார்.

Advertisement:

Related posts

தமிழகத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை : ஆர்.பி.உதயகுமார்

Karthick

2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு: ராதாகிருஷ்ணன்!

எல்.ரேணுகாதேவி

கொரோனா வைரஸ்: இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 3,417 பேர் உயிரிழப்பு!

Ezhilarasan