பணகுடி அருகே லாரி கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர் படுகாயம்!

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பழங்கள் ஏற்றி வந்த லாரி டயர் வெடித்து  தலைகீழாக கவிழ்ந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்தார்.  மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு விற்பனைக்காக பழங்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது.   இதனை…

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பழங்கள் ஏற்றி வந்த லாரி டயர் வெடித்து 
தலைகீழாக கவிழ்ந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்தார். 

மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு விற்பனைக்காக பழங்களை ஏற்றிக் கொண்டு லாரி
ஒன்று புறப்பட்டது.   இதனை மதுரையைச் சேர்ந்த வனராஜ் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
மேலும்,  கிளீனராக அதே பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் உடன் வந்துள்ளார்.  லாரி
வள்ளியூருக்கும் பணகுடிக்கும் இடையே நான்கு வழிச்சாலையில் செல்லும் போது பின்பக்க டயர் வெடித்த நிலையில்,  ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் டிரைவர் வனராஜ் படுகாயம் அடைந்தார்.  அவரை மீட்டு  நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  இதில் அந்த லாரியில் இருந்த சுமார் 2 லட்ச ரூபாய் மதிப்பிலான ஆப்பிள்,  ஆரஞ்சு,  திராட்சை போன்ற பழங்கள் ரோட்டில் சிதறி வீணானது.  இச்சம்பவம் குறித்து பணகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.