லோகேஷ் கனகராஜ்-விஜய் கூட்டணியில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் இருந்து நடிகை த்ரிஷா வெளியேறியதாக ஒரு செய்தி காட்டுத்தீயாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் லியோவும் ஒன்று. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ளார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லியோவின் ப்ரோமோ கடந்த வாரம் வெளியிடப்பட்டு சமூக ஊடகங்களில் புயலாக சுழன்று கொண்டிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
லியோ படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார் த்ரிஷா. ஏற்கனவே குருவி, கில்லி, ஆதி, திருப்பாச்சி போன்ற படங்களில் விஜய்யுடன் நடித்த த்ரிஷா தற்போது 5-வது முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார். 14 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தில் நடிகர் விஜய்யின் மனைவியாக த்ரிஷா நடிப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில், லியோவில் இருந்து நடிகை த்ரிஷா வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குழப்பத்திற்கு த்ரிஷா தான் காரணம். ஏனெனில், லியோவில் நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும், அவரைப் பற்றி நெட்டிசன்கள் வெளியிட்ட பல ட்வீட்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ரீ-ட்வீட் செய்தார்.
ஆனால் தற்போது அந்த ட்வீட்களில் பெரும்பாலானவற்றை அவர் நீக்கியுள்ளார். தற்போது ஒட்டு மொத்த படக்குழுவினரும் காஷ்மீரில் முகாமிட்டுள்ள நிலையில் நடிகை த்ரிஷா மட்டும் மூன்றே நாளில் சென்னை திரும்பினார். இதனால் தான் அவர் லியோ படத்தில் இருந்து விலகி விட்டதாக செய்திகள் பரவி வருகின்றன.
ஆனால், த்ரிஷா லியோ பட பூஜையில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தையும், படத்தில் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து லியோ படக்குழு வெளியிட்ட போஸ்டரையும் நீக்கவில்லை. எனவே அவர் லியோ படத்தில் இருந்து விலகியதாக வெளியான தகவல் வெறும் வதந்தி என கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, ரீ-ட்வீட்களை சில நாட்களில் நீக்குவது த்ரிஷாவின் வழக்கம் என்றும், அதனால் தான் லியோ படம் குறித்த பதிவுகளை அவர் நீக்கிவிட்டார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.