குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு: வெள்ளக்காடான சாலை

திருப்பூர் மாவட்டம், அவிநாசி – மங்கலம் சாலையில் திடீரென ஏற்பட்ட குடிநீர் குழாய் உடைப்பால் வெள்ளக்காடானது. கோவை மாவட்டம், சிறுமுகை அருகே சுமைதாங்கி பகுதியில் அமைந்துள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து அன்னூர், அவிநாசி, மோப்பிரிப்பாளையம்,…

திருப்பூர் மாவட்டம், அவிநாசி – மங்கலம் சாலையில் திடீரென ஏற்பட்ட குடிநீர் குழாய் உடைப்பால் வெள்ளக்காடானது.

கோவை மாவட்டம், சிறுமுகை அருகே சுமைதாங்கி பகுதியில் அமைந்துள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து அன்னூர், அவிநாசி, மோப்பிரிப்பாளையம், பல்லடம் வழியாக திருப்பூர் வரை செல்லும் நான்காம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மெயின்
குழாய் உடைந்து அவிநாசி – மங்கலம் சாலையில் திடீரென தண்ணீர் பீறிட்டு கொட்டியது.

பிரதான குழாய் உடைந்ததால் 25 அடி உயரத்துக்கு தண்ணீர் பீறிட்டதைக் கண்டு
அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். குழாய் இணைப்பில் ஏற்பட்ட அதிக அழுத்தத்தால் குழாயில் உடைப்பு ஏற்பட்டதாகவும், தகவல் கிடைத்தவுடன் உடனடியாக தண்ணீர் நிறுத்தப்பட்டு உடைந்த குழாயை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.

அவிநாசி-மங்கலம் சாலையில் குழாய் உடைப்பால் தண்ணீர் வீணாகி
சாலை முழுவதும் ஆறாக ஓடியதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.