மேற்கு வங்கத்தில் தொடர்ந்து எம்.எல்.ஏக்களை இழக்கும் திரிணாமுல் காங்கிரஸ்!

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் இன்று கட்சியிலிருந்து விலகியுள்ளார். அவர் பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கொரோனா தொற்றுக்கு பின்னர் நேற்று நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் இன்று கட்சியிலிருந்து விலகியுள்ளார். அவர் பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கொரோனா தொற்றுக்கு பின்னர் நேற்று நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார். இதில் மேற்கு வங்கம், தமிழ்நாடு, அசாம், மற்றும் கேரளா மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்திருந்தார். இந்நிலையில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் இன்று கட்சியிலிருந்து விலகியுள்ளார். அவர் பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

டைன் ஹார்பர் பகுதியிலிருந்து இரண்டு முறை மாநில சட்டப்பேரவைக்கு திரிணாமுல் காங்கிரஸிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தீபக் குமால் ஹல்திர் “தன்னை சுயமாக வேலை செய்ய அனுமதிக்கவில்லை” என கட்சியிலிருந்து விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் இன்று மத்தியம் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் நடைபெறும் பாஜக பேரணியில் பங்கேற்று அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தரப்பிலிருந்து, “எதிர் வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் தீபக் விலகியுள்ளதாகவும், வாய்ப்பு வழங்கப்படாததால் கட்சியிலிருந்து விலகுபவர்கள் குறித்து தான் பெரிதும் கவலைப்படுவதில்லை என்றும்” மேற்கு வங்க முதல்வர் மமதா முன்னதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போதுவரை திரிணாமுல் கட்சியிலிருந்து 18 முக்கிய பிரமுகர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். இதில் எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் ஆகியோர் அடங்கியுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply