திருவள்ளூர் பகுதியில் சொந்த அண்ணனையே கத்தியால் குத்திகொலை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அடுத்த குமாரச்சேரி கிராமத்தில் யோகன் மற்றும் ஏசுவா வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஆந்திர மாநிலம் நெல்லூரில் கூலி வேலை செய்து வந்துள்ளனர். பின்னர், தம்பி ஏசுவாவுக்கு திருமணமான நிலையில் போதை பழக்கத்துக்கு அடிமையானதால் மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்ணன் யோகன், நெல்லூரிலிருந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் கஞ்சா போதையில் இருந்த தம்பியை யோகன் தட்டிகேட்டதாக கூறப்படுகிறது. போதை பழக்கத்தை விடும்படி கூறியதால் அண்ணனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் ஆத்திரமடைந்த ஏசுவா அங்கிருந்த கத்தியால் அண்ணன் கழுத்தில் பலமாக தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து யோகன் உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் ஏசுவாவை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.