ஓபிஎஸ் அணியினரின் முப்பெரும் விழா மாநாடு: முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை

திருச்சியில் நடைபெறும் மும்பெரும் விழா மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பினர் தனியார் ஹோட்டலில் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் ஓபிஎஸ் அணியினர் சார்பில் இன்று மாலை…

திருச்சியில் நடைபெறும் மும்பெரும் விழா மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பினர் தனியார் ஹோட்டலில் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.

திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் ஓபிஎஸ் அணியினர் சார்பில் இன்று மாலை முப்பெரும் விழா மாநாடு நடைபெறுகிறது. இதற்காக அந்த மைதானத்தில் சென்னை அதிமுக தலைமை அலுவலகம் போன்ற தோற்றத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு 20 ஆயிரம் தொண்டர்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு மைதானம் முழுவதும் பிளக்ஸ், பேனர்கள் கொடிகள் கட்டப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது குறித்து ஓபிஎஸ் தனது அணி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். திருச்சி ஜங்ஷன் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன், JCT பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.