“திருச்சி திமுகவின் கோட்டை” – மநீம தலைவர் கமல்ஹாசன்!

 “இந்தியாவில் செங்கோட்டை,  செயின்ட் ஜார்ஜ் கோட்டை ஆகியவற்றை விட மூத்தது திருச்சி மலைக்கோட்டை.  அது இன்று திமுக வின் கோட்டையாக உள்ளது” என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற தேர்தல்…

 “இந்தியாவில் செங்கோட்டை,  செயின்ட் ஜார்ஜ் கோட்டை ஆகியவற்றை விட மூத்தது
திருச்சி மலைக்கோட்டை.  அது இன்று திமுக வின் கோட்டையாக உள்ளது” என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி,  அ.தி.மு.க. கூட்டணி,  பாரதிய ஜனதா கூட்டணி மோதும் அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சி தனியாக களம் காண்கிறது. இந்நிலையில் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் தலைவர்  கமல்ஹாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.  இன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.  அப்போது அவர் பேசியதாவது:

“இந்தியாவில் செங்கோட்டை,  செயின்ட் ஜார்ஜ் கோட்டை ஆகியவற்றை விட மூத்தது
திருச்சி மலைக்கோட்டை.  அது இன்று திமுக வின் கோட்டையாக உள்ளது.  நாட்டை காக்கும் இந்த வேள்வியில் நானும் பங்கேற்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

மேலும் திருச்சியில் நடந்த முதல் பிரச்சார பொதுக்கூட்டத்தில்,  “இந்த பிரச்சார பொதுக்கூட்டம் இந்தியாவிற்கே திருப்புமுனையாக இருக்கும்” என முதலமைச்சர் பேசியது குறித்தான கேள்விக்கு,  அது மிகையான வார்த்தை அல்ல.  நேர்மையான நம்பிக்கை என கமல்ஹாசன் பதில் அளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.