“ஏப்ரல் 19-ல் நாம் போடும் ஓட்டு, மோடிக்கு வைக்கும் வேட்டு” – அமைச்சர் உதயநிதி பேச்சு!

 “ஏப்ரல் 19 ஆம் தேதி நாம் போடும் ஓட்டு பிரதமர் மோடிக்கு வைக்கும் வேட்டு” என பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.  சென்னை புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் பகுதியில் வடசென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக…

 “ஏப்ரல் 19 ஆம் தேதி நாம் போடும் ஓட்டு பிரதமர் மோடிக்கு வைக்கும் வேட்டு” என பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். 

சென்னை புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் பகுதியில் வடசென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  திறந்தவெளி வாகனத்தில் பொதுமக்களிடையே பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் பேசியதாவது:

“இதுவரை வடசென்னைக்கு மூன்றாவது முறை வருகிறேன்.  தேர்தலுக்காக வருபவர்கள் அல்ல நாங்கள்.  உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய வருபவர்கள்.  கொளத்தூர் தொகுதியில் இருந்து வரும் போது சோர்வாகவே வந்தேன்.  வரும் வழியில் கூட்டணி கட்சி தொண்டர்கள்,  திமுக தொண்டர்கள் நாம் தான் வெல்ல போகிறோம் என உற்சாகம் அளித்தனர்.  உச்சி வெயிலில் உற்சாகம் அளித்த தொண்டர்களை பாரக்கும் போதே தெரிகிறது நாம் வெற்றி பெறுவோம் என்று.  ஏப்ரல் 19 ஆம் தேதி நாம் போடும் ஓட்டு மோடிக்கு வைக்கும் வேட்டு.

கடந்த முறை ஒன்றாக வந்த எதிரிகள் இந்தமுறை தனிதனியாக பிரிந்து வருகிறார்கள்.  கடந்த முறை 4.50 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கலாநிதி வீராசாமியை வெற்றி பெற வைத்த நீங்கள்,  தற்போது 6 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.