முக்கியச் செய்திகள் பக்தி

திருச்சி மலைக்கோட்டை சித்திரை திருத்தேரோட்டம் தொடங்கியது

திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு மட்டுவார்குழலி சமேத தாயுமானவர் சுவாமி திருகோவில் சித்திரை திருத்தேரோட்டம் தொடங்கியது.

திருச்சி மலைக்கோட்டையில், சித்திரை திருவிழா கடந்த 5-ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கிய நிலையில் நாள்தோறும் தாயுமானவர் மற்றும் மட்டுவார் குழலம்மை பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். ஆலயத்தின் வரலாற்று சிறப்புமிக்க திருவிழாவாக பார்க்கப்படும் செட்டி பெண்ணுக்கு சிவபெருமான் வைத்தியம் பார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அடுத்து முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 10-ஆம் தேதி காலை 12 மணி அளவில் துவங்கி ஆலயத்தில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அண்மைச் செய்தி: ‘10வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த லக்பா ஷெர்பா’

அதற்கு முன்னதாக தாயுமானவர் மற்றும் மட்டுவார் குழலம்மை வீதி உலா வந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது – அதன்பின்னர் நூற்றுக்கால் மண்டபத்திற்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய தாயுமானவர் மற்றும் மட்டுவார் குழலம்மையாருக்கு திருக்கல்யாண வைபவம் மிக சிறப்பாக நடைபெற்றது. நேற்று குதிரை வாகனத்தில் சிவபெருமான் திருவீதி உலா வந்தார், அதிகாலை 4.30 மணி அளவில் திருத்தேரில் எழுந்தருளினார். இந்நிலையில், மலைக்கோட்டை அருள்மிகு மட்டுவார்குழலி சமேத தாயுமானவர் சுவாமி திரு கோவில் சித்திரை திருத்தேரோட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. ஓம் “நமச்சிவாயா” “தாயுமானவ” என்கிற கோஷங்கள் முழங்க பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Advertisement:
SHARE

Related posts

இனிமேல் 8 போடத் தேவையில்லை!

Jeba Arul Robinson

நிலத்தை அபகரித்த மர்ம நபர்கள்; கிராம மக்கள் கண்ணீர்

Halley Karthik

பிரேசில் தடுப்பூசி ஒப்பந்தத்தில் முறைகேடு இல்லை: பாரத் பயோடெக் மறுப்பு

Halley Karthik