சத்தீஸ்கரில் ஹெலிகாப்டர் விபத்து: இரு விமானிகள் பலி

சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூர் விமான நிலையத்தில் அரசு ஹெலிகாப்டர் வியாழக்கிழமை இரவு விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர். ராய்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தர் விமான நிலையத்தில் ஓடுபாதையில் நடந்த இந்த விபத்தில், விமானிகள் கேப்டன்…

சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூர் விமான நிலையத்தில் அரசு ஹெலிகாப்டர் வியாழக்கிழமை இரவு விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர்.

ராய்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தர் விமான நிலையத்தில் ஓடுபாதையில் நடந்த இந்த விபத்தில், விமானிகள் கேப்டன் கோபால் கிருஷ்ண பாண்டா மற்றும் கேப்டன் ஏபி ஸ்ரீவஸ்தவா ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்த விபத்தில் ஹெலிகாப்டர் முற்றிலும் சேதமடைந்தது. இதில் விமானி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் மாநில அரசின் உத்தரவின் பேரில், இந்த விபத்து தொடர்பான விரிவான விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.