முக்கியச் செய்திகள் செய்திகள்

10வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த லக்பா ஷெர்பா

நேபாளத்தைச் சேர்ந்த லக்பா ஷெர்பா எவரெஸ்ட் சிகரத்தை 10ஆவது முறையாக அடைந்து தனது சாதனையை தானே முறியடித்தார்.

உலகிலேயே மிக உயரமான சிகரம் எவரெஸ்ட். சீனா, நேபாள எல்லையில் உள்ள இதன் உயரம் 8,848 மீட்டர். அதாவது 29,035 அடி ஆகும். இதன் உச்சியை அடைந்து பலர் சாதனை படைத்து வருகின்றனர். ஆண்டுதோறும் மே மாதம் மலையேறும் சீசன் தொடங்குவது வழக்கம்.

எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறுவோருக்கு வழிகாட்டியாக இருப்பவர் காமி ரிட்டா (52). இவர் 1994 இல் முதன்முதலாக இந்த சிகரத்தில் ஏறினார்.  கடந்த 2018 ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதி 22 ஆவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார். இதன்மூலம் அதிக முறை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் நபர் என்ற சாதனை படைத்தார்.

இந்த ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏற 316 பேருக்கு நேபாள சுற்றுலாத் துறை அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து, இந்த சீசனில் மலேயேற்றப் பாதையில் மலையேறுபவர்களுக்கு உதவும் வகையில் ரிட்டா தலைமையிலான குழுவினர் கயிறுகளை பொருத்தி உள்ளனர். காமி ரிட்டா 11 வழிகாட்டிகள் அடங்கிய குழுவினருடன் மே 7 ஆம் தேதி 26-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி தனது முந்தைய சாதனையை அவரே முறியடித்துள்ளார்.

இந்நிலையில், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி உயிருடன் இறங்கிய முதல் நேபாள பெண் என்ற பெருமையை லக்பா ஷெர்பா பெற்றுள்ளார்.

இதுகுறித்து, லக்பா ஷெர்பாவின் அண்ணனும், பயண அமைப்பாளருமான மிங்மா கேலு கூறுகையில், லக்பா மற்றும் சில மறையேறுபவர்கள் வியாழக்கிழமை அதிகாலையில் சிகரத்தின் 8,849 மீட்டரை அடைந்தனர். காலநிலைக்கு மிகவும் நன்றி. லக்பாவின் உடல்நிலை நன்றாக உள்ளது. அவள் பாதுகாப்பாக சிகத்தில் இருந்து கீழே இறங்கினாள் என்று கூறினார்.

2003ஆம் ஆண்டு லக்பா ஷெர்பா, தனது சகோதரன் மற்றும் சகோதரியுடன் இணைந்து ஒரே நேரத்தில் 8,000 மீட்டர் மலையைக் கடந்தார். இதன் மூலம் முதல்முதலாக மலையேறிய உடன்பிறப்புகள் என்று கின்னஸ் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டால் அங்கீகரிக்கப்பட்டனர்.

நேபாளத்தைச் சேர்ந்த ஷெர்பா தனது மூன்று குழந்தைகளுடன் அமெரிக்காவின் கனெக்டிகட்டில் வசித்து வருகிறார். தனது முதல் குழந்தை பிறந்து எட்டு மாதங்களுக்குப் பிறகு லக்பா ஷெர்பா எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 48 வயதான ஷெர்பாவுக்கு முறையான கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

2016ஆம் ஆண்டு பிபிசிக்கு ஷெர்பா ஷெட்டி அளித்த பேட்டியின்போது, நான் இன்னும் சோர்வடையவில்லை. 10 முறையாவது எவரெஸ்ட் சிகத்தை ஏறிவிட வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்நிலையில், அவர் அன்று கூறியதுபோலவே எவரெஸ்ட் சிகரத்தை 10ஆவது முறையாக அடைந்து தனது சாதனையை தானே முறியடித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், அனைத்துப் பெண்களும் தங்களின் கனவுகளை நிறைவேற்ற ஊக்கப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

ஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்

Ezhilarasan

நாடாளுமன்றத்தில் திடீரென ராஜினாமாவை அறிவித்த திரிணாமுல் MP!

Niruban Chakkaaravarthi

ஜெயலலிதா பிறந்த நாளன்று அவர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை : அமைச்சர் அறிவிப்பு

Halley Karthik