8 நாட்களுக்குப் பின் முடிவுக்கு வந்த குறவர் இன மக்களின் போராட்டம்!

சாதி சான்றிதழ் கோரி நரிக்குறவர் இன மக்கள் நடத்தி வந்த போராட்டம் 8  நாட்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ளப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் இனமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி…

சாதி சான்றிதழ் கோரி நரிக்குறவர் இன மக்கள் நடத்தி வந்த போராட்டம் 8  நாட்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது.

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ளப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் இனமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு  சேரும் தங்களது குழந்தைகளுக்கு எம்.பி.சி-க்கு பதில் எஸ்.சி.ஆதிதிராவிடர் என்று சான்றிதழ் வழங்கக் கோரி கடந்த 8 நாட்களாக வட்டாட்சியர் அலுவலகம் முன் அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு, பல்வேறுக் கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அவர், தகுதியின் அடிப்படையில் ஜாதி சான்றிதழ் வீடுத் தேடி வந்து வழங்கப்படும் என உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து நரிக்குறவர் இன மக்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர். –

– ரூபி

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.