தமிழ்நாட்டில் முதன்முறையாக 1000-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள்
பயன் அடையும் வகையில் தாய் சேய் நல மையம் திறக்கப்பட்டதற்கு திரைப்பட இயக்குநரும், நடிகருமான சசிகுமார் பாராட்டு தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம், பல்வேறு மக்கள் நல திட்டங்களை அமல்படுத்தி ,
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
கடந்த மே 3-ம் தேதி மாநகராட்சி சார்பில் முதன்முறையாக 1000-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பு மற்றும் இறப்பு இல்லா கர்ப்பிணிகள் என்ற இலக்கை அடையும் நோக்கில் மாநகராட்சி அலுவலகத்தில் தாய் சேய் நல கண்காணிப்பு மையம் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், அந்த மையத்தை திரைப்பட இயக்குநரும் நடிகருமான சசிகுமார் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
“தஞ்சை மாநகராட்சியின் செயல்பாடுகளை அறிந்து பாராட்ட வேண்டும் என்பதற்காக
மாநகராட்சி அலுவலகம் வந்தேன். கர்ப்பிணிகளை பாதுகாக்கும் விதத்தில் தமிழ்நாட்டில் முதன்முறை மாநகராட்சி எடுத்துள்ள நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசுக்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.
-ம. ஸ்ரீ மரகதம்









