பல்லடம் அருகே தள்ளுவண்டி கடை உரிமையாளரை வீடு புகுந்து திருநங்கைகள் தாக்கிய சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் தாலுக்கா காந்திஸ்வரன்புதுரை சேர்ந்த முத்து
என்பவர் தனது குடும்பத்தினருடன் பல்லடத்தில் மாணிக்காபுரம் சாலையில் உள்ள
பெரியார் நகரில் வசித்து வருகிறார்.
என்ஜிஆர் சாலையில் தள்ளுவண்டி கடை நடத்தி வரும் முத்து, இன்று பணி முடிந்து நள்ளிரவு 12 மணி அளவில் தள்ளு வண்டியோடு வீடு திரும்பும் போது திருநங்கை ஒருவர் அவரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் முத்து தனது வீட்டிற்கு வந்த பிறகு ஐந்து திருநங்கைகள் முத்துவின் வீட்டின் மீது கற்களை வீசியுள்ளனர். வெளியே வந்து பார்த்த முத்துவின் குடும்பத்தினர் ஏன் இப்படி அராஜகம் செய்கிறீர்கள் என கேட்டதற்கு முத்துவை கட்டையால் சரமாரியாக தாக்கிய உள்ளனர். திருநங்கைகள் முத்து மீது தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. வாய் மற்றும் மூக்கு பகுதியில் பலத்த காயமடைந்த முத்து சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் இரு தரப்பினர் இடையே விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் திருநங்கைகள் முத்துவின் வீட்டில் புகுந்து சரமாரியாக தாக்கும் சிசிடிவி வீடியோ வெளியாகி அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.







