மார்ச் 27 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மற்றும் நேரடியாக தொடங்குகிறது.
வரும் 31-ம் தேதி ஐபிஎல் 2023 சீசன் துவங்க உள்ளது. இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் ஏப்ரல் மாதம் 3ம் தேதி நடைபெறவுள்ளது. போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் திங்கட்கிழமை அதாவது எதிர்வரும் 27ம் தேதி விற்பனை தொடங்கவுள்ளது.
ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் இந்த டிக்கெட் விற்பனை நடைபெற உள்ளது. டிக்கெட் விற்பனை ஆன்லைன் மற்றும் சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள இரண்டு டிக்கெட் கவுண்டர்களில் வழங்கப்படுகிறது.
www.insider.in தளத்தின் வழியே 27-ம் தேதி காலை 09.30 மணி முதல் டிக்கெட் விற்பனை நடைபெற உள்ளது.







