தாராபுரத்தில் மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி டிரான்ஸ்பார்மரில் உயிரோடு தீப்பிடித்து எரிந்தது சோக நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உப்புத்துறை பாளையத்தை சேர்ந்தவர் காளிமுத்து. தாராபுரம் மின்சார வாரியத்தில் பணியாற்றும் வயர்மேன் ஒருவரிடம், பதிவு செய்யப்படாத உதவியாளராக வேலை செய்து வந்திருக்கிறார். சம்பவத்தன்று மின்வாரிய அலுவலகத்திற்கும், வயர்மேனுக்கும் அவர் தகவல் எதுவும் கொடுக்காமல், தாராபுரம் சங்கர் மில் குடியிருப்பு பகுதியில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரில் ஏறி, வேலை செய்து கொண்டிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில், டிரான்ஸ்பார்மரிலேயே தலைகீழாக தொங்கிய நிலையில், உடல் முழுவதும் தீ பிடித்து எரிந்தது. இதையடுத்து, பொதுமக்கள் விரைந்து சென்று காளிமுத்துவின் உடலை மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவிக்கு பின் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.