முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

கொதிகலன் வெடிப்பில் தொழிலாளிகள் உயிரிழப்பு!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள மத்திய அரசின் விவசாய உரம் தயாரிப்பு நிறுவன ஆலையில் கொதிகலன் வெடித்த சம்பவத்தில் அங்கு பணியாற்றி வந்த தொழிலாளிகள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் அலகாபாத்திலுள்ள புல்பூர் நகரத்தில் கடந்த 1974ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி மத்திய அரசின் விவசாய உரம் தயாரிப்பு நிறுவன ஆலை இஃப்கோ (IFFCO) தொடங்கப்பட்டுள்ளது. பல புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் கடந்த 37 வருடங்களாக வெற்றிகரமாக இந்நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி பொதுத்துறை நிறுவனமான புல்பூர் ஆலையில் கொதிகலன் வெடித்தது. அதிகாரிகளின் அலட்சியத்தால்தான் வெடிப்பு நிகழ்ந்ததாக புகார் எழுந்தது. இந்த நிகழ்வுக்கு காரணமாக கூறப்படும் 11 அதிகாரிகளை இஃப்கோ நிர்வாகம் இடைநீக்கம் செய்தது.
இதனையடுத்து இஃப்கோ புல்பூர் ஆலையில் செய்தித் தொடர்பாளர் சஞ்சை மிஷ்ரா கூறுகையில், “இப்படி ஒரு சம்பவம் நிகழக் காரணமான 11 அதிகாரிகளையும் உடனடியாக இடைநீக்கம் செய்துவிட்டொம். இடைநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளில், ஆலையின் நிர்வாக இயக்குநர் மசூத் அகமது, இணை பொது மேலாளர் (பயன்பாட்டு மேலாளர்) மற்றும் மேலும் இச்சம்பவத்துக்குக் காரணமான 9 அதிகாரிகளை இடைநீக்கம் செய்துள்ளோம்” என்று கூறினார்.

மேலும் இந்த அதிகாரிகளின் அலட்சியத்தால் கொதிகலன் வெடித்த இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 14 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து காயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற தொழிலாளர்களுக்கு திவீர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஐபிஎல் போட்டிகளில் புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

G SaravanaKumar

மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் திடீர் பள்ளம்!

Web Editor

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Halley Karthik