சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகின்றது. மத்திய அரசு கடந்த 13 ஆம் தேதி தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியது. இதனால் நேற்று தங்கம் விலை உயர்ந்தது.
அதன் படி தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ. 50 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.15,050-க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,20,400-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு 5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.315-க்கும், 1 கிலோ ரூ.5000 குறைந்து ரூ.3.15 லட்சத்துக்கும் விற்பனையானது.
இந்த நிலையில் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன் படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 14,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் சவரனுக்கு ரூ. 800 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 1,19,600-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. அதன் படி கிராமுக்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 305க்கும், கிலோவுக்கு 10,000 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ. 3,05,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.




