மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியில் இருந்து சென்னை நோக்கி, அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. ஜானகிபுரம் என்ற பகுதியின், இணைப்புச் சாலையில் திடீரென லாரி வந்ததால் அரசு பேருந்தின் ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்தார். அப்போது பின்னால் வந்த 2 தனியார் சொகுசு பேருந்துகள் மற்றும் கார் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில், மேல்மலையனூர் கோயிலுக்கு சென்றுவிட்டு காரில் வந்த வந்துகொண்டிருந்த 2 பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் அவர்களை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்தினால் சுமார் ஒரு மணிநேரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.








