முக்கியச் செய்திகள் விளையாட்டு

2-வது டெஸ்ட்: டாஸ் தாமதம், இந்திய அணியில் 3 வீரர்கள் திடீர் நீக்கம்

நியூசிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் 3 வீரர்கள் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை, இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் பங்கேற்றுள்ளன.

முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடந்தது. இதில் இந்திய அணி, வெற்றி பெற வேண்டிய நிலையில் நியூசிலாந்து அணி போராடி டிரா செய்தது. 2 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, மும்பையில் இன்று தொடங்க இருக்கிறது. முதலாவது டெஸ்டில் ஓய்வ்ளிக்கப்பட்ட விராத் கோலி அணிக்கு திரும்பியுள்ளார். இதனால் அணியில் யாரை உட்கார வைப்பது என்ற கேள்வி எழுந்தது.

கான்பூர் டெஸ்ட் போட்டியின் போது, அறிமுக வீரராக இடம் பிடித்த ஸ்ரேயாஸ் ஐயர் முதல் இன்னிங்ஸில் சதமும் இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதமும் அடித்து அசத்தினார். அதனால் அவரை நீக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது.

இந்நிலையில் காயம் காரணமாக, ரஹானே, இஷாந்த் சர்மா, ஜடேஜா ஆகியோர்  போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இஷாந்த் சர்மா, கான்பூர் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் இடது கை சுண்டுவிரலில் பலத்தக் காயமடைந்தார். அது குணமடையாததால், அணியில் இடம்பெறவில்லை.

கான்பூர் டெஸ்ட்டின் கடைசி நாளன்று ரஹானேவுக்கு காலில் ஏற்பட்ட தசைப் பிடிப்பு குணமடையாததால் அணியில் இடம்பெறவில்லை. ஜடேஜாவுக்கு முழங்கையில் ஏற்பட்ட காயம் வீங்கி இருப்பதால் அவருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள் ளது.

இதற்கிடையே, மும்பையில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக, வான்கடே மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது. இதனால், போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மைதானத்தில் உள்ள ஈரப்பதம் குறித்து நடுவர்கள் 10.30 மணியளவில் ஆய்வு செய்ய இருக்கின்றனர். ஈரப்பதம் குறைந்திருந்தால் டாஸ் போடப்படும்.

Advertisement:
SHARE

Related posts

மண்ணை மொழியை மக்களைக் காக்க இன்று போல் என்றும் களத்தில் நிற்போம் : கமல்ஹாசன்

Halley Karthik

ஊரக வளர்ச்சித்துறை – பிளிப்கார்ட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

Halley Karthik

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 17ஆம் தேதி நடைபெறும்: ஆட்சியர் அனிஷ்சேகர்

Arivazhagan CM